இலங்கை

மின் கட்டண திருத்தம் தொடர்பில் குழப்பம்

Published

on

மின் கட்டண திருத்தம் தொடர்பில் குழப்பம்

மின் கட்டண திருத்த யோசனையை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவில் சமர்ப்பிப்பதில் மேலும் தாமதம் ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்போது நிலவும் மழையினால் நீர் மின் உற்பத்தி தொடர்பான சரியான தகவல்களை உரிய நேரத்தில் பெற்றுக்கொள்ள முடியாத நிலை காணப்படுவதாக இலங்கை மின்சார சபை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளது.

எனினும், இது தொடர்பான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு, மின்சாரக் கட்டண திருத்த யோசனை உடனடியாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படும் என மின்சார சபை உறுதியளித்துள்ளது.

எதிர்பாராத சூழ்நிலை காரணமாக முன்மொழிவை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு இரண்டு முறை நீட்டிக்கப்பட்டதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Exit mobile version