இலங்கை

இராணுவத்தை விட்டு வெளியேறியுள்ள 15000 அதிகாரிகள்

Published

on

இராணுவத்தை விட்டு வெளியேறியுள்ள 15000 அதிகாரிகள்

கடந்த ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி முதல் மே மாதம் 20 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் பொது தேவைகளின் அடிப்படையில் 15,667 அதிகாரிகள் மற்றும் படையினர் இலங்கை இராணுவத்தை விட்டு வெளியேறியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன்படி இராணுவத்தினர் வெளியேறியமைக்கான காரணம் குறித்து அரசாங்கம் உரிய விசாரணைகளை மேற்கொள்ளவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

வரலாற்றில் பல்வேறு காலகட்டங்களில் இவ்வாறான பொது தேவைகளின் அடிப்படையில் விலகுவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ள போதிலும், யுத்த காலத்தில் கூட இவ்வளவு தொகையான இராணுவத்தினர் ஒரேயடியாக வெளியேறவில்லை என கூறப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு நிலையில் அரசாங்கம் இராணுவத்தை விட்டு வெளியேறியமைக்கான காரணங்களை நிச்சயமாக ஆராய வேண்டும். ஆனால் இதுவரையில் அவ்வாறான விசாரணைகள் எதுவும் நடத்தப்படவில்லை என பாதுகாப்பு தரப்பினரின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஒரு மாத இடைவெளியில் 373 இராணுவத்தினர் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர்.

மேலும், பொருளாதார அழுத்தத்தினால் இந்நிலை நேரடியாக இலங்கை பாதுகாப்புத்துறையில் தாக்கத்தை செலுத்துவதாக தெரியவந்துள்ளது.

Exit mobile version