இலங்கை

முதன் முறையாக இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் புதிய ரக பெட்ரோல்

Published

on

முதன் முறையாக இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் புதிய ரக பெட்ரோல்

இந்தியன் எண்ணெய் (Indian Oil) நிறுவனத்தின் வரலாற்றில் முதல் தடவையாக 100 ஒக்டேன் சூப்பர் ரக பெட்ரோல் கையிருப்பு இலங்கைக்கு (Sri Lanka) இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த எரிபொருள் இருப்பு மே 18 ஆம் திகதி மும்பையில் உள்ள ஜவஹர்லால் நேரு துறைமுக அறக்கட்டளையிலிருந்து (JNPT) இலங்கைக்கு அனுப்பப்பட்டது.

அதன்போது உரையாற்றிய இந்தியன் எண்ணெய் நிறுவனத்தின் இயக்குநர் வி. சதீஷ் குமார், “எமது சமீபத்திய தயாரிப்புகளில் ஒன்றை இலங்கை சந்தைக்கு அனுப்புவது மிகவும் முக்கியமான தருணம்” என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், XP100 என பெயரிடப்பட்ட இந்த வகை பெட்ரோல் இந்தியாவிலேயே உள்நாட்டிலேயே தாயாரிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Exit mobile version