இலங்கை
டயானா கமகே பிணையில் விடுதலை
டயானா கமகே பிணையில் விடுதலை
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, சந்தேகநபரை ஐந்து இலட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும், தலா ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுதலை செய்ய உத்தரவிட்ட நீதவான், பாதிக்கப்பட்ட தரப்பினரின் சட்டத்தரணிகளுக்கு பாதகமான கருத்துக்களை வெளியிடுவதைத் தவிர்க்குமாறும் சந்தேக நபருக்கு உத்தரவிட்டுள்ளார்.
அனைத்து தரப்பினரும் முன்வைத்த உண்மைகளை பரிசீலித்த கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இந்த பிரேரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போது குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றில் முன்னிலையாகவில்லை.
இந்நிலையில், பொய்யான தகவல்களை சமர்ப்பித்து இலங்கை பிரஜாவுரிமை இன்றி கடவுச்சீட்டு பெற்ற சம்பவத்தில் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள டயானா கமகே, சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றில் முன்னிலையாகிய பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.