இலங்கை

தொடரும் மழையினால் ஏற்படவுள்ள நோய் அபாயம்

Published

on

தொடரும் மழையினால் ஏற்படவுள்ள நோய் அபாயம்

நாட்டில் தற்போது தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக வயிற்றுப்போக்கு நோய் எற்படும் அறிகுறிகள் உள்ளதாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே, எதிர்வரும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு நாடு பூராகவும் தானம் வழங்கும் நிகழ்வுகளில் சுத்தமான நீரைப் பயன்படுத்துமாறு மக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை பொது சுகாதார சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன (Upul Rohana) தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், மழையினால் நீர்நிலைகள் மாசுபடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஆகவே வெசாக் பண்டிகைக்கு தானம் வழங்கப்படும் விகாரைகள் முதல் நாள் வரை பதிவு செய்யப்படும் எனவும் உபுல் ரோஹன (Upul Rohana) குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஏனைய வருடங்களுடன் ஒப்பிடும் போது இந்த வருடம் தானம் வழங்குவதில் குறைபாடு காணப்படுவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் கனமழையினால் 3,518 குடும்பங்களைச் சேர்ந்த 10299 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (Disaster Management Center) தெரிவித்துள்ளது.

Exit mobile version