இலங்கை

விரைவில் நாடாளுமன்றம் கலைக்கப்படும்

Published

on

விரைவில் நாடாளுமன்றம் கலைக்கப்படும்

முக்கியமான சட்டங்களை இயற்றியதன் பின்னர் நாடாளுமன்றத்தை கலைக்க இரு தரப்பினரும் இணக்கம் தெரிவித்துள்ளாதாக ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்க (Udayanga Weeratunga) தெரிவித்துள்ளார்.

குறித்த தகவலை கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரவிக்கையில், “எதிர்வரும் ஜூன் 14 ஆம் திகதி அல்லது அதற்கு முற்பட்ட தினத்துக்குள் நாடாளுமன்றம் கலைக்கப்படும்.

அரசியலமைப்பின் பிரகாரம் எதிர்வரும் செப்டெம்பர் அல்லது ஒக்டோபர் மாதம் அதிபர் தேர்தல் நடத்தப்படும் என்று குறிப்பிடப்படுகின்றது.

அதிபர் தேர்தலில் வெற்றி பெறுபவர் இந்த நாடாளுமன்றத்தை நிச்சயம் கலைப்பார் அத்தோடு புதிய அதிபர் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு ஓரிரு மாதங்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தை கலைப்பதில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version