இலங்கை
நீதி தேடும் மக்களுக்கு அமெரிக்கா பங்காளியாக இருக்கும் : ஜூலி சங்
நீதி தேடும் மக்களுக்கு அமெரிக்கா பங்காளியாக இருக்கும் : ஜூலி சங்
இலங்கையின் போர் முடிவடைந்து 15 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் அமெரிக்க அரசாங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் ஐக்கியப்பட்ட எதிர்காலத்திற்கான உறுதியையும் நம்பிக்கையையும் பிரதிபலிக்கும் வகையில், அனைத்து இலங்கையர்களுடனும் ஐக்கியமாக இருப்பதாக அமெரிக்கா(United States) உறுதியளித்துள்ளது.
இது தொடர்பில் எக்ஸ் பதிவில் தமது கருத்துக்களை வெளியிட்டுள்ள இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் (Julie Chung), நீதி சம உரிமைகள் மற்றும் வாய்ப்புகளை தொடர்ந்து தேடும் இலங்கை மக்களுக்கு அமெரிக்கா உறுதியான பங்காளியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், நிலையான சமாதானம் மற்றும் முன்னேற்றத்திற்கான பன்முகத்தன்மையை உள்ளடக்கிய வளமான மற்றும் உள்ளடக்கிய எதிர்காலத்தை நோக்கிய இலங்கையின் பயணத்திற்கு அமெரிக்காவின் உறுதிப்பாட்டையும் அவர் கூறியுள்ளார்.