இலங்கை

சாதாரண தரப் பரீட்சையில் மேலும் சில மோசடிகள்:மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

Published

on

சாதாரண தரப் பரீட்சையில் மேலும் சில மோசடிகள்:மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் மேலும் சில மோசடிகள் தொடர்பில் இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.

மினுவாங்கொடை பரீட்சை நிலையத்தில் தமிழ் மொழி மூல பரீட்சையில் தோற்றிய 14 மாணவர்களுக்கு புவியியல் வினாத்தாளில் சில பிரிவுகள் வழங்கப்படவில்லை என்றும், இதனால், மாணவர்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர் என்றும் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கம் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளதாக ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதேபோல், இரணடு விசேட தேவையுடைய மாணவர்களுக்கும் பரீட்சை மேற்பார்வையாளர்களால் இடையூறு ஏற்படுத்தப்பட்டதாகவும் முறைப்பாட்டாளர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இது தொடர்பாக பரீட்சை திணைக்களமும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

Exit mobile version