இலங்கை

வாகனங்களை ஒப்படைக்க காலம் தாழ்த்தும் டயனா

Published

on

வாகனங்களை ஒப்படைக்க காலம் தாழ்த்தும் டயனா

முன்னாள் ராஜாங்க அமைச்சர் டயனா கமகே இன்னமும் நான்கு வாகனங்களை மீள ஒப்படைக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

பிரித்தானிய பிரஜை என்ற காரணத்தினால் நாடாளுமன்ற உறுப்பினராக அங்கம் வகிக்கத் தகுதியற்றவர் என அண்மையில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருந்தது.

இதன்படி, டயனா கமகேவின் நாடாளுமன்ற உறுப்புரிமை ரத்து செய்யப்பட்டது.

ராஜாங்க அமைச்சராக பதவி வகித்த காலத்தில் வழங்கப்பட்ட வாகனங்களை உடனடியாக ஒப்படைக்குமாறு டயனாவிற்கு, சுற்றுலாத்துறை அமைச்சு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

எனினும் நேற்றைய தினம் வரையில் இந்த வாகனங்கள் சுற்றுலாத்துறை அமைச்சிடம் ஒப்படைக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

டிஸ்கவரி (Discovery) ரக ஜீப், டபள் கெப் வாகனம், ப்ராடோ (Prado) ஜீப் மற்றம் நிசான் (Nissan) ரக கார் என்பனவே இன்னமும் ஒப்படைக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இவற்றில் டபள் கெப் ரக வாகனம் விபத்து ஒன்று காரணமாக குருணாகல் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Exit mobile version