இலங்கை

பால்டிமோர் கப்பல் விபத்து : 50 நாட்களாக கப்பலுக்குள் இந்திய மற்றும் இலங்கை பணியாளர்கள்

Published

on

பால்டிமோர் கப்பல் விபத்து : 50 நாட்களாக கப்பலுக்குள் இந்திய மற்றும் இலங்கை பணியாளர்கள்

அமெரிக்க பால்டிமோரில் (America – Baltimore) தொழில்நுட்ப பிரச்சினையால் சரக்குக் கப்பல் கடல் பாலத்தில் மோதிய சம்பவம் இடம்பெற்று 50 நாட்களாகியும், சரக்கு கப்பலில் உள்ள பணியாளர்கள் தொடர்ந்தும் கப்பலிலேயே தங்கவைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்திய மற்றும் இலங்கை பணியாளர்களான இந்த 21 பேரும் விசாரணை செய்யப்பட்ட நிலையில், அவர்களின் தொலைபேசிகளும் அமெரிக்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

முன்னதாக குறித்த சம்பவத்தில் உயிரிழந்த 06 கட்டுமானத் தொழிலாளர்களின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த பேரழிவுக்கு கப்பல் பணியாளர்கள் தனிப்பட்ட ரீதியில் பொறுப்பேற்கவேண்டும் என்று சிலர் வலியுறுத்தி வருகின்றமை தொடர்பில் பணியாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இதன் காரணமாக இவர்களில் சிலரின் மனவுறுதி புரிந்துகொள்ளக்கூடிய வகையில் குறைந்துள்ளதாக கடற்படையினரை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

Exit mobile version