இலங்கை

இந்தியாவின் அறிவிப்பு: இலங்கைக்கு சாதகமாகியுள்ளதாக தகவல்

Published

on

இந்தியாவின் அறிவிப்பு: இலங்கைக்கு சாதகமாகியுள்ளதாக தகவல்

மாலைதீவைப் (Maildives) புறக்கணிக்குமாறு இந்தியப் பயணிகளுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு இலங்கையின் பயணத் துறைக்கு முற்றிலும் சாதகமாகியுள்ளதாக இலங்கையின் சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ (Harin Fernando) இந்திய ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

2023இல் மாலைதீவின் மிகப்பெரிய மூலச் சந்தையாக இந்தியா (India) விளங்கியுள்ளது.

எனினும் தற்போது சீனா, ரஸ்யா, ஐக்கிய இராச்சியம், இத்தாலி மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளின் வருகையை விட ஆறாவதாக குறைந்த எண்ணிக்கையிலேயே இந்திய பயணிகள் மாலைதீவுக்கு செல்கின்றனர்.

இலங்கைக்கு ஏறக்குறைய 34,400 இந்தியப் பயணிகள் கடந்த ஜனவரியில் வருகை தந்துள்ளனர்.

இது கடந்த ஆண்டு ஜனவரியில் வந்த 13,759 பேரை விட இரண்டு மடங்கு அதிகமாகும் என்று இலங்கை சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.

2024ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் வருகைகள் 2023ஆம் ஆண்டின் அதே காலப்பகுதியை விட அதிகமாக இருந்துள்ளது.

இந்நிலையில், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மட்டும் வாரத்திற்கு 80 முறை இந்திய விமான நிலையங்களுக்குள் பயணங்களை மேற்கொள்வதாக ஹரின் பெர்ணான்டோ குறிப்பிட்டுள்ளார்.

இந்தியப் பயணிகள் 2030ஆம் ஆண்டளவில் உலகின் நான்காவது பெரிய பயணச் செலவு செய்பவர்களாக மாற உள்ளனர்.இது இலங்கையின் சுற்றுலாத் துறைக்கு முற்றிலும் நல்லதொரு முன்னறிவிப்பு.

மேலும், இந்தியாவில் வேகமாக பொருளாதாரம் வளர்ந்து வருகிறது இதன் மூலம் இலங்கை நிச்சயமாக பயனடைகிறது.

இந்திய நிறுவனங்கள் தீவில் கணிசமான முதலீடுகளைச் செய்யவுள்ளதோடு ஐடிசி போன்ற இந்தியாவிற்கு வெளியே தங்கள் முதல் ஹோட்டலை இலங்கையில் திறந்துள்ளது என்றும் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

Exit mobile version