இலங்கை

இலங்கை ரூபாயின் மதிப்பு தொடர்பில் தகவல் வெளியிட்ட ஆராய்ச்சி நிறுவனம்

Published

on

இலங்கை ரூபாயின் மதிப்பு தொடர்பில் தகவல் வெளியிட்ட ஆராய்ச்சி நிறுவனம்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு இந்த ஆண்டின் பிற்பகுதியில் ரூபா310 தொடக்கம் 320 ரூபாய் என்ற அளவில் வீழ்ச்சியடைய வாய்ப்புள்ளதாக முதல் மூலதன ஆராய்ச்சி நிறுவனம் (First Capital Research) தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு முடிந்தவுடன், இறக்குமதிகளுக்கான தேவை அதிகரித்து வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்துவது ஆரம்பிக்கப்படும் நிலையில் இந்த சரிவு எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை 2029ஆம் ஆண்டு வரை 06 முதல் 07 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வருடாந்த வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய கடப்பாட்டில் உள்ளது.

இது கடன் மறுசீரமைப்புக்கு பின் 03 தொடக்கம் 04 பில்லியன் அமெரிக்க டொலர்களாகக் குறையலாம்.

இந்தநிலையில் குறிப்பிட்ட இறக்குமதிகள் மீதான பண வரம்பு வைப்புத் தேவைகளை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) தளர்த்தியுள்ளது.

அத்துடன் அரசாங்கம், வாகன இறக்குமதி உட்பட தற்போதுள்ள இறக்குமதிக் கட்டுப்பாடுகளை படிப்படியாக நீக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே இது ரூபாய் மாற்று விகிதத்தில் கீழ்நோக்கிய அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும் என்று மூலதன ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை சுற்றுலா வருவாயில் முன்னேற்றம் மற்றும் அதிக பணம் அனுப்புதல் ஆகியவற்றின் மத்தியில் ரூபாயின் மதிப்பு தற்போது உயர்ந்துள்ளதோடு சுற்றுலா வருவாய் 46.3 சதவீதம் அதிகரித்து இந்த ஆண்டு 03 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயரும்.

இதேபோல், வெளிநாட்டு தொழிலாளர்களின் பணம் அனுப்புதல் கடந்த ஆண்டு பதிவான 06 பில்லியன் அமெரிக்க டொலர்களில் இருந்து இந்த ஆண்டு 6.6 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version