இலங்கை

இலங்கையில் பாரிய திருட்டுகளில் ஈடுபட்ட தமிழ் சிறுவன்

Published

on

இலங்கையில் பாரிய திருட்டுகளில் ஈடுபட்ட தமிழ் சிறுவன்

கம்பளையில் பாரிய திருட்டுகளில் ஈடுபட்ட 15 வயதுடைய பாடசாலை மாணவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

தங்க வளையல்கள் மற்றும் கையடக்கத் தொலைபேசிகள் உட்பட சுமார் பத்து லட்சம் ரூபாய் பெறுமதியான திருடப்பட்ட பொருட்களுடன் கலஹா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கம்பளை நில்லம்ப அலுவலக சந்தி பகுதியில் உள்ள வரிசை வீடொன்றில் சிறிய தந்தையுடன் இருந்த சிறுவனை பொலிஸார் தங்கள் பொறுப்பில் அழைத்துச் சென்றுள்ளனர்.

கலஹா நகரில் உள்ள வீட்டிற்குள் நுழைந்து அங்கிருந்து 8 லட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் திருடியதுடன், அதே ஊரில் உள்ள தொலைபேசி கடைக்குள் நுழைந்து ஐபோன்களும், அலுவலக சந்தியிலுள்ள வீட்டிற்குள் நுழைந்து 50ஆயிரம் ரூபாய் பெறுமதியான கைச்சிள் மற்றும் அதே பிரதேசததில் உள்ள வீட்டில் இருந்த உண்டியல் உட்பட மின்னணு உபகரணங்களும் சிறுவனால் திருடப்பட்டுள்ளன.

திருடப்பட்ட சைக்கிளை குறித்த சிறுவனின் மற்ற நண்பர் வயல்வெளியில் ஓட்டிச் சென்றபோது திருட்டுச் சம்பவம் குறித்து பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

சிறுவயது முதலே கடும் துன்புறுத்தல்களுக்கு மத்தியில் இருந்த இந்த சிறுவன் பொலிஸாரின் விசாரணைகளுக்கு முகம் கொடுக்காமல் மௌனமாக இருந்துள்ளார்.

இதையடுத்து, இதனையறிந்த குற்றப் பிரிவின் நிலைய அதிகாரி விசாரணைகளை நிறுத்தி, சிறுவனை அமைதிப்படுத்தி அவருடன் நட்பு கொண்டுள்ளார். பின்னர் அவரிடம் அன்பு காட்டி சாக்லேட், ஐஸ்கிரீம் கொடுத்து அனைத்து தகவல்களையும் பெற்றுள்ளார்.

சிறுவன் தனது தந்தையை சிறுவயதில் இருந்து பார்த்ததில்லை. தாய் மறுமணம் செய்து கொண்டதால், சித்தப்பாவின் கட்டளைக்கு உட்பட்டு, அன்றிலிருந்து கடும் மன உளைச்சலுக்குள்ளாகியுள்ளார்.

தாய் ஒரு வருடத்திற்கு முன்னர் வீட்டு வேலைக்காக வெளிநாட்டு சென்றுள்ளதாகவும், அவர் அனுப்பும் பணம் சித்தப்பா மதுபானத்திற்காக செலவிடப்பட்டதாகவும், பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

நிலம்ப தமிழ் கல்லூரியில் 9ஆம் ஆண்டு படிக்கும் இவர் இந்த நிலை காரணமாக பாடசாலைக்கு செல்வதும் குறைந்துள்ளது.

அன்பும், கருணையும் இழந்து தனக்கு பிடித்த சாப்பாடு போன்றவற்றை வாங்க பணம் இல்லாததால் இயல்பாகவே இவ்வாறு திருடியுள்ளார் என தெரியவந்துள்ளது.

Exit mobile version