இலங்கை

கொழும்பு நகரில் வெப்பநிலையை கட்டுப்படுத்த நடவடிக்கை

Published

on

கொழும்பு நகரில் வெப்பநிலையை கட்டுப்படுத்த நடவடிக்கை

கொழும்பு நகரில் வெப்பநிலையை கட்டுப்படுத்தும் வகையில், வழித்தடங்களில் Interlocking stones எனப்படும் கற்களுக்கு பதிலாக சிறிய செடிகளை வளர்க்கும் திட்டத்தை கொழும்பு மாநகர சபை ஆரம்பித்துள்ளது.

பிரதான வீதிகளின் இடையிடையே கற்களை இடுவதன் மூலம் நகரின் வெப்பநிலையை குறைக்க முடியாது என கொழும்பு மாநகர சபையின் காணி மற்றும் சுற்றாடல் அபிவிருத்திப் பிரிவின் பொறியியலாளர் இந்திக்க பத்திரன தெரிவித்துள்ளார்.

மேலும் மரங்களின் தண்டுகளுக்கு அருகில் Interlocking கற்களை இடுவது தாவரங்களின் செயல்முறைக்கு தீங்கு விளைவிக்கும் என தாவர நிபுணர் சுனில் கமகே சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் காரணமாக கொழும்பில் அபிவிருத்தி செய்யப்பட்டு வரும் வீதிகளில் உள்ள கற்கனை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொறியியலாளர் இந்திக தெரிவித்தார்.

ஜோர்ஜ் ஆர்.டி.சில்வா மாவத்தையின் இரு பாதைகளுக்கு நடுவில் உள்ள Interlocking கற்களை மாற்றி சிறிய செடிகளை நடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இது நகரின் வெப்பநிலையை சிறிது குறைக்கும் மற்றும் நகரத்தைச் சுற்றியுள்ள வளிமண்டலத்தின் தரத்தை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் கொழும்பு நகரில் உள்ள செடிகளின் தண்டுக்கு அருகாமையில் உள்ள Interlocking கற்களை அகற்றுவதற்கு கொழும்பு நகர சபை தற்போது நடவடிக்கை எடுத்து வருகின்றது.

Exit mobile version