இலங்கை

அதிக வெப்பம் தொடர்பில் அறிவுறுத்தல்

Published

on

அதிக வெப்பம் தொடர்பில் அறிவுறுத்தல்

நாட்டில் நிலவும் கடும் வெப்பநிலையுடனான சூரிய ஒளியானது கண்களுக்கு தீங்கு விளைவிப்பதாக போஷாக்கு நிபுணர் டொக்டர் ரேணுகா ஜயதிஸ்ஸ எச்சரித்துள்ளார்.

எனவே வெளி பயணத்தின் போது கறுப்பு கண்ணாடி அணிவது மிகவும் பொருத்தமானது எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த நாட்களில் அதிக சூரிய ஒளி உடலுக்கும் தீங்கு விளைவிக்கும் என்பதால், சூரியன் சருமத்தில் நுழைவதைத் தடுக்கும் வகையில் வைத்தியரின் ஆலோசனையின்படி கிரீம்களை தடவவும் மக்களை அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், அதிக வெப்பம் காரணமாக, 2 1/2 லிட்டர் தண்ணீர் குடிப்பது மிகவும் பொருத்தமானது எனவும் வைத்தியர் தெரிவித்துள்ளார்.

இந்த நாட்களில் தர்பூசணி, ஆரஞ்சு, வெள்ளரி போன்றவற்றைக் கொண்டு பானங்கள் தயாரித்து அருந்துவது மிகவும் பொருத்தமானது என்று வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Exit mobile version