இலங்கை
இலங்கையில் 15 ஆக குறைக்கப்படும் அமைச்சுக்கள்
இலங்கையில் 15 ஆக குறைக்கப்படும் அமைச்சுக்கள்
வெரைட் ரிசர்ச் ஆய்வு நிறுவனம், இலங்கையில் ஒரு பகுத்தறிவு அரசாங்கத்திற்கான வரைபடத்தை வெளியிட்டுள்ளது.
அதில் தற்போதைய 30 அமைச்சகங்களுக்கு பதிலாக 15 அமைச்சகங்களுடன் எவ்வாறு செயற்பட முடியும் என்பதை அது விளக்கியுள்ளது.
இதன்படி, வெளியுறவு, கல்வி, ஆராய்ச்சி, பொது பயன்பாடுகள், பாதுகாப்பு, பொருளாதார விவகாரங்கள், நீதி, நிதி மற்றும் திட்டமிடல், குடும்பம் மற்றும் சமூக மேம்பாடு, சுகாதாரம், உள்துறை மற்றும் பொது நிர்வாகம், தொழிலாளர், சமூகம் மற்றும் கலாசாரம், சுற்றுச்சூழல், துறைமுகங்கள், கப்பல் மற்றும் சிவில் விமான போக்குவரத்து மற்றும் விவசாயம் ஆகிய அமைச்சுக்கள் இதில் முன்மொழியப்பட்டுள்ளன.
மேலும், இலங்கையில் கடமைகள், செயற்பாடுகள் நிறுவனங்கள் மற்றும் சட்டங்களை இந்த அமைச்சுக்களின் கீழ் எவ்வாறு செயற்படுத்த முடியும் என்பதை ‘வெரைட் ரிசர்ச்’ ஆவணங்கள் காட்டுகின்றன.
இந்தநிலையில் அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளுக்கும் இந்த வரைபடம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.