இலங்கை

இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி

Published

on

இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் வீரர்களது கொடுப்பனவுகள் பாரியளவில் அதிகரிக்கப்பட உள்ளது.

ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் இந்த அதிகரிப்பு தொடர்பில் அறிவித்துள்ளது.

கிரிக்கெட் வீரர்களின் நலன்புரி மற்றும் ஊக்கக் கொடுப்பனவுகளை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணி மற்றும் ஏ அணி ஆகியனவற்றில் விளையாடி வரும் 41 வீரர்களுக்கு ஆறு தர நிலைகளின் அடிப்படையில் கொடுப்பனவு நிர்ணயிக்கப்பட உள்ளது.

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியொன்றில் விளையாடுவதற்காக வீரர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு தொகை 100 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அணிக்காக வழங்கும் பங்களிப்பு மற்றும் போட்டியில் வெளிக்காட்டும் திறமையின் அடிப்படையில் கொடுப்பனவு தீர்மானிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒருநாள் சர்வதேச போட்டிகள் மற்றும் ரி20 போட்டிகளில் விளையாடும் வீரர்களின் போட்டிக் கட்டணம் 25 வீதத்தினால் உயர்த்தப்பட உள்ளது.

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தர வரிசையின் அடிப்படையிலான அடைவுகளுக்கும் கொடுப்பனவு தொகை வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த பந்து வீச்சாளர், சிறந்த துடுப்பாட்டவீரர் மற்றும் சிறந்த களத் தடுப்பாளர், தர வரிசையில் 2 முதல் 10ம் இடத்தை வகிப்பவர்களுக்கு கொடுப்பனவு வழங்கப்படும் என ஶ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

Exit mobile version