அரசியல்

அநுரவின் தேசிய மக்கள் சக்தி பிளவுபடும்! மகிந்த தரப்பில் ஆரூடம்

Published

on

அநுரவின் தேசிய மக்கள் சக்தி பிளவுபடும்! மகிந்த தரப்பில் ஆரூடம்

அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayakke) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (NPP) விரைவில் பிளவுபடும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினரான ரோஹித அபேகுணவர்தன (Rohitha Abeygunawardena) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், “முதலில் ஜே.வி.பியில் இருந்து விமல் வீரவன்ஸ வெளியேறினார்.

அதன்பின்னர், சோமவன்ச அமரசிங்க சென்றார். இந்நிலையில், மற்றுமொரு குழு பிரிந்து சென்று முன்னிலை சோசலிசக் கட்சியை உருவாக்கியுள்ளது.

எனவே, விரைவில் தேசிய மக்கள் சக்திக்கும் ஜே.வி.பிக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டு பிளவு ஏற்படும்.

அதேவேளை, ஜே.வி.பி. ஒரு வழியிலும், தேசிய மக்கள் சக்தி மற்றுமொரு வழியிலுமே பயணிக்கின்றன” என சுட்டிக்காட்டியுள்ளார்.

Exit mobile version