இலங்கை
ஜனாதிபதியின் செயலாளருக்கு பறந்த கடிதம்
ஜனாதிபதியின் செயலாளருக்கு பறந்த கடிதம்
தேர்தல்கள் ஆணைக்குழு, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவுக்கு(Saman Ekanayake) கடிதம் மூலம் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் குறித்து அறிவுறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதனை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் R.M.A.L. ரத்னாயக்க குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கூறுகையில்,ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக அரசாங்கத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நிறைவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக தேர்தல்கள் கண்காணிப்பு அமைப்பான பெவ்ரல் அமைப்பினால் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோள்கள் தொடர்பான அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.
இந்நிலையில் வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தித் திட்டங்களை ஜூலை மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து மாவட்டச் செயலாளர்களுக்கும் அரசாங்கம் பணிப்புரை விடுத்துள்ளது.
மேலும், தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பதாகவே அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்களின் போது முன்னெடுக்கப்படுகின்ற தேர்தல் பிரசாரங்கள் தொடர்பாக அவதானித்து வருவதாக பெவ்ரல் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.