இலங்கை

சீனாவை கட்டுக்குள் கொண்டு வர இந்தியாவை பயன்படுத்தும் ரணில்

Published

on

சீனாவை கட்டுக்குள் கொண்டு வர இந்தியாவை பயன்படுத்தும் ரணில்

இலங்கை முழுவதும் சீனாவின் ஆதிக்கத்தை எதிர்கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) நிர்வாகம் வெளிப்படையாகவே முக்கிய திட்டங்களுக்கு இந்திய நிறுவனங்களை அதிகளவில் ஈடுபடுத்துகிறது என ஜப்பானை தளமாகக்கொண்ட ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது

சீன நிதியுதவியுடன் கட்டப்பட்ட மத்தள ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தின் (Mattala Rajapaksa International Airport) நிர்வாகத்தை இந்திய-ரஸ்ய கூட்டுக் கட்டுப்பாட்டுக்கு வழங்கியதை மையப்படுத்தியே இந்தக் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், கடந்த செவ்வாயன்று இலங்கை அரசாங்கம் இந்தியாவின் அதானி கிரீன் எனர்ஜியுடன் (India’s Adani Green Energy) 20 வருட மின்சார கொள்முதல் ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இது வடக்கில் மன்னார் மற்றும் பூநகரியில் இரண்டு காற்றாலை மின் நிலையங்களை 484 மெகாவோட்களை உருவாக்க 442 மில்லியன் டொலர்களை கொண்டு வரும்.

முன்னதாக இந்திய கோடீஸ்வரரான கௌதம் அதானியின் (Gautam Adani) குழு இலங்கையில் இந்த திட்டத்தை மாத்திரமல்லாமல் 2021ஆம் ஆண்டில் கொழும்பில் 700 மில்லியன் டொலர் துறைமுக முனையத் திட்டத்தை பெற்றுக்கொண்டுள்ளதுடன் இதற்காக 553 மில்லியன் டொலர்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், அண்மைய ஆண்டுகளில் தெற்காசியா முழுவதும் சீனாவின் செல்வாக்கை முறியடிக்க இந்திய அரசாங்கம் திட்டமிட்டு முயற்சித்து வருவதை பலர் நம்புவதாகவும் குறித்த ஊடகம் தெரிவித்துள்ளது.

Exit mobile version