இந்தியா

இந்தியாவில் வசிக்கும் ஈழத்தமிழ் ஏதிலிகள் தொடர்பில் தகவல்

Published

on

இந்தியாவில் வசிக்கும் ஈழத்தமிழ் ஏதிலிகள் தொடர்பில் தகவல்

இந்திய (India) அரசாங்கத்துக்கு சமர்ப்பிக்கப்பட்ட 2023ஆம் ஆண்டு நிலவரப்படி, 58,200 ஈழத்தமிழ் ஏதிலிகள் தமிழ்நாடு முழுவதும் 104 முகாம்களில் வசித்து வருவதோடு 33,200 இற்கும் மேற்பட்டோர் முகாம்களுக்கு வெளியே வாழ்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இவர்களின் சிவில் ஆவணங்களைப் பொறுத்தவரையில் 95 வீதமானோர் இந்திய அடையாள அட்டைகளையும், 78 வீதமானோர் வங்கிக் கணக்குகளையும் ஒரு வீதமானோர் இலங்கைக் கடவுச்சீட்டுகளையும் 03 வீதமானோர் இலங்கை தேசிய அடையாள அட்டைகளையும் வைத்துள்ளனர்.

இந்தநிலையில் ஒரே ஒரு ஈழத் தமிழரான நளினி கிருபாகரனுக்கு மட்டுமே இந்தியாவின் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை முகாம்களில் உள்ள தமிழர்களில் பெரும்பாலானோர் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வசித்து வந்துள்ளனர்.

இருப்பினும், சுகாதார சேவைகள் அல்லது குடியுரிமைகள் கிடைக்காமல் மோசமான அகதிகள் முகாம்களில் அவர்கள் தொடர்ந்து சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

Exit mobile version