இலங்கை
கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசா வழங்கும் முறையை மாற்றியமைக்க முயற்சி
கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசா வழங்கும் முறையை மாற்றியமைக்க முயற்சி
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் on-arrival விசா வழங்குவதில் ஏற்பட்டுள்ள குழப்பங்களை அடுத்து, விசா வழங்கும் செயல்முறையை மாற்றியமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த தேவையை பூர்த்தி செய்யும் வகையில், அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இதற்கிடையில், VFS குளோபல் கட்டுநாயக்க விமான கவுண்டரில் செயல்படுவதை தற்காலிகமாக நிறுத்தி விட்டதாக அரசாங்க வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.
எனினும் on-arrival வீசா வழங்கலை மேற்கொள்ளுமாறு இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்த போதுிலும், VFS குளோபல் நிராகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் இலுக்பிட்டிய கருத்து வெளியிடுகையில்,
கட்டுநாயக்க விமான நிலையத்தின் on-arrival விசா வழங்குவது தொடர்பான முழு செயல்முறையும் குடிவரவு அதிகாரிகளால் மட்டுமே கையாளப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
எனினும் குடிவரவுத் துறை அதிகாரிகளால் வழங்கப்பட்ட இறுதி ஒப்புதலுக்கமைய, VFS குளோபல் e-Visa ஆவணப்படுத்தல் செயல்முறையை கையாளுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
e-Visa வழியாக விசாக்களுக்கு விண்ணப்பிக்கும் போது, குறைந்தபட்ச கட்டணம் 18.5 டொலரிருந்து தொடங்குகிறது மற்றும் மொத்த கட்டணம் வரிகள் மற்றும் விசா வகையைப் பொறுத்து மாறுபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.