இலங்கை

ஜனாதிபதிக்கு சம்பிக்க அறிவுரை

Published

on

ஜனாதிபதிக்கு சம்பிக்க அறிவுரை

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீது நாட்டு மக்களுக்கு நன்மதிப்பு உள்ளது. ராஜபக்சர்களுடன் கூட்டணியமைத்து மக்களின் வெறுப்பை ஜனாதிபதி பெற்றுக்கொள்ள கூடாது என்று ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க(Patali Champika Ranawaka) தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று(03) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது, நாட்டில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் தீர்மானமிக்கது. பொதுஜன பெரமுனவின் சார்பில் தேர்தலில் போட்டியிட எவருமில்லை.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை(Ranil Wickremasinghe) முன்னிலைப்படுத்திக் கொண்டு ஜனாதிபதி தேர்தலில் செல்வாக்கு பெறலாம் என்ற நிலைப்பாட்டில் இருந்துக் கொண்டு ராஜபக்சர்கள் செயற்படுகிறார்கள்.

ராஜபக்சர்களிடமிருந்து விலகி செயற்படுவது ஜனாதிபதியின் அரசியலுக்கு சிறந்ததாக அமையும்.

பொருளாதார படுகொலையாளிகள் என்று உயர்நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட ராஜபக்சர்களை முன்னிலைப்படுத்தியுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு அரசியல் எதிர்காலம் என்பதொன்று கிடையாது.

இடம்பெறவுள்ள ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தல்களில் ராஜபக்சர்களுக்கும்,பொதுஜன பெரமுனவுக்கும் நாட்டு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.

இந்நிலையில் மே தின கூட்டத்தில் எமது பலத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளோம் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவினரும், ராஜபக்சர்களும் குறிப்பிடுவது நகைப்புக்குரியது.

2022 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் மக்கள் போராட்டம் பலம் பெற்றதையும், ராஜபக்சர்கள் பதவிகளை விட்டு தப்பிச் சென்றதையும் மறந்து விட்டார்கள் என கூறியுள்ளார்.

Exit mobile version