அரசியல்
ஆதரவை கோராத ரணில்: நாமலுக்கு மகிந்த அறிவுரை
ஆதரவை கோராத ரணில்: நாமலுக்கு மகிந்த அறிவுரை
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) வலிமைமிக்க வேட்பாளரை நியமிக்கும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச(Mahinda Rajapaksa) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில், நேற்று(03) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர்,
“தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe) எதிர்வரும் தேர்தலுக்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவை இதுவரை கோரவில்லை.
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தனது மகன் நாமல் ராஜபக்சவுக்கு(Namal Rajapaksa) இன்னும் கால அவகாசம் உள்ளது.
அவர் பொறுமையாக இருக்க வேண்டும் எனவும். அவர் இளைஞரா அல்லது நடுத்தர வயதினரா என்பது முக்கியமில்லை.
ஆனால் நாங்கள் ஒரு வெற்றிபெறும் வேட்பாளரை ஜனாதிபதித் தேர்தலுக்கு பெயரிடுவோம்.
நாமல் ஜனாதிபதி வேட்பாளராக வருவார் என்று நான் எதிர்பார்க்கவில்லை, முடிவு கட்சியிடம் உள்ளது.
அவர் இன்னும் காத்திருக்க வேண்டும்” என்றார்.