இலங்கை
சர்வதேச ரீதியில் ரூபாவின் பெறுமதியில் மாற்றம்
சர்வதேச ரீதியில் ரூபாவின் பெறுமதியில் மாற்றம்
சர்வதேச ரீதியில் ரூபாவின் பெறுமதியில் வளர்ச்சி பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நிதி ராஜாங்க அமைச்சா ரஞ்சித் சியம்பலாபிட்டிய இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
உலகில் மிகவும் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நாணய அலகுகளில் ஒன்றாக இலங்கை ரூபா பதிவாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டின் முதல் நான்கு மாதங்களிலும் உலகின் ஏனைய நாணய அலகுகளுடன் ஒப்பீடு செய்யும் போது ரூபாவின் பெறுமதி குறிப்பிடத்தக்களவு வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
முதல் நான்கு மாதங்களில் அமெரிக்க டொலருக்கு நிகராக ரூபாவின் பெறுமதி 9.1 வீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
யூரோ நாணய அலகுடன் ஒப்பீடு செய்யும் போது ரூபாவின் பெறுமதி 12.7 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது.