இலங்கை

அரசாங்க மருத்துவமனைகளில் பாரிய சிக்கல் நிலை

Published

on

நாட்டின் அரசாங்க மருத்துவமனைகளில் கடுமையான மருந்துப் பொருள் தட்டுப்பாடு நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்தியாவசிய மருந்துப் பொருட்களுக்கு நிலவி வரும் தட்டுப்பாடு காரணமாக நாடு முழுவதிலும் நோயாளிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மருந்துப் பொருட்களுக்கு நிலவும் தட்டுப்பாடு காரணமாக மக்கள் தனியார் மருந்தகங்களில் மருந்துகளை கொள்வனவு செய்ய நேரிட்டுள்ளது.

குறிப்பாக கொழும்பு தேசிய மருத்துவமனையில் பாரியளவில் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாட்டு நிலை நீடித்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பொருளார ரீதியில் நலிவடைந்த மக்கள் தனியார் மருந்தகங்களில் மருந்து கொள்வனவு செய்ய முடியாது சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஸடென்ட் வகைகள், அமொக்ஸ்லின் போன்ற மருந்து வகைகள் போன்றவற்றுக்கு கடுமையான தட்டுப்பாட்டு நிலை நீடித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை சுமார் 20 முதல் 30 வீதமான அளவில் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருவதாக அரசாங்க மருந்தாளர் சங்கத்தின் தலைவர் துசார ரணதேவ தெரிவித்துள்ளார்.

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற முறைகேடுகளினால் இவ்வாறு மருந்துப் பொருட்களுக்கு தட்டப்பாட்டு நிலை ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version