இலங்கை

வெளிநாட்டு கடன் தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சரின் அறிவிப்பு

Published

on

வெளிநாட்டு கடன் தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சரின் அறிவிப்பு

வருடாந்தம் சுமார் 2.5 பில்லியன் டொலர்கள் வெளிநாட்டு கடனாக செலுத்தப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய (Ranjith Siambalapitiya) தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு கடன் செலுத்துதல் உத்தியோகபூர்வமாக இடைநிறுத்தப்பட்டுள்ள போதிலும், இந்த தொகை கடனாக செலுத்தப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும், இருதரப்பு வெளிநாட்டு கடன் கொடுப்பனவுகள் மாத்திரம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடன் கொடுப்பனவு இடைநிறுத்தப்படுவதற்கு முன்னர், அவர்கள் வருடாந்தம் சுமார் 5 பில்லியன் டொலர்களை செலுத்தி வருவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

கடன் கொடுப்பனவுகள் இடைநிறுத்தப்பட்ட போதிலும், 2022 ஆம் ஆண்டில் 2.5 பில்லியன் டொலர்களும், 2023 ஆம் ஆண்டில் 2.6 பில்லியன் டொலர்களும் வெளிநாட்டுக் கடனாக செலுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version