இலங்கை

நடிகை தமிதா மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

Published

on

நடிகை தமிதா மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

சிங்கள திரைப்பட நடிகை தமிதா அபேரட்ன(Damitha aberathna), இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.

அநீதியான முறையில் கைது செய்யப்பட்டதன் மூலம் தமது மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

பாரியளவு நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு தமிதா மற்றும் அவரது கணவர் ஆகியோர் கடந்த ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக பணம் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக தமிதா மற்றும் அவரது கணவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடாக தாம் அரசியலில் பிரவேசித்த காரணத்தினால் தமக்கு எதிராக இவ்வாறு அநீதி இழைக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version