இலங்கை

ரணிலின் மே தின உரை : வெளியான தகவல்

Published

on

ரணிலின் மே தின உரை : வெளியான தகவல்

நாட்டுக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் மட்டுமே சுபமுகூர்த்தம் உள்ளது என ஜனாதிபதி ரணில் விக்ரமசி்ங்க (Ranil Wickremesinghe) தெரிவித்துள்ளார்.

மே தின நிகழ்வில் நேற்றைய தினம் (01.05.2024) உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

”ஐக்கிய தேசியக் கட்சியை உருவாக்கிய போது அதனை அங்குரார்ப்பணம் செய்வதற்காக சுபமுகூர்த்தம் ஒன்றை கட்சியின் ஸ்தாபகர் டீ.எஸ். சேனநாயக்க (D.S. Senanayake) தேடியிருந்தார்.

அதே போன்றதொரு சுப முகூர்த்த நேரத்திலேயே நாட்டிற்கான சுதந்திரத்தையும் பெற்றுக்கொண்டிருந்தார்.

அந்த வகையில், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இந்த நாட்டுக்கும் மட்டுமே சுபமுகூர்த்தம் உள்ளது. அதன் காரணமாகவே பொருளாதார நெருக்கடியினால் வீழ்ச்சியடைந்த நாட்டை எம்மால் கட்டி எழுப்ப முடிந்தது. மற்றவர்கள் எல்லாம் நாட்டைப் பொறுப்பேற்க மறுத்து விட்டு ஒதுங்கிக் கொண்டனர்.

ஆனால், ஐக்கிய தேசியக் கட்சியின் ஒற்றை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த நான் அந்த சவாலை எதிர்கொண்டேன்.

இதற்கமையவே, பிரதமராகவும், ஜனாதிபதியாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளேன். மேலும், இன்று நாடும் நெருக்கடியில் இருந்து மீ்ட்சி பெற்றுக் கொண்டிருக்கின்றது.

இதற்கு நாட்டுக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் மட்டுமே உள்ள சுபமுகூர்த்தமே காரணம்” என குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version