இலங்கை

பிரித்தானியாவிலிருந்து நாடுகடத்தப்பட்டார் முதல் புகலிடக் கோரிக்கையாளர்

Published

on

பிரித்தானியாவிலிருந்து நாடுகடத்தப்பட்டார் முதல் புகலிடக் கோரிக்கையாளர்

புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவுக்கு நாடுகடத்துவேன் என வாக்குறுதியளித்த பிரித்தானிய பிரதமர் அதை நிறைவேற்றியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அதன்படி பிரித்தானியாவிலிருந்து நாடுகடத்தப்படும் முதல் புகலிடக்கோரிக்கையாளருடன் விமானம் ஒன்று ருவாண்டாவுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோரை ருவாண்டாவுக்கு நாடுகடத்த பிரித்தானிய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுவந்த நிலையில், குறித்த நபர் முதலாவதாக நாடுகடத்தப்பட்டுள்ளார்.

இலங்கையர்கள் உட்பட பலர் புகலிடக்கோரிக்கை கோரி பிரித்தானியாவில் அகதியாக தஞ்சம் புகுந்துள்ளனர்.

இந்நிலையில் பிரதமர் ரிஷி சுனக்கின் இந்த நடவடிக்கையானது அகதி தஞ்சம் கோரி நிராகரிக்கப்பட்ட பலருக்கும் மிகப்பெரும் நெருக்கடியாக அமைந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version