இலங்கை
தென்னிலங்கையின் பாதாள உலக கும்பல்களை கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை
தென்னிலங்கையின் பாதாள உலக கும்பல்களை கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை
தென்னிலங்கையின் பாதாள உலகக்கும்பல்களை கட்டுப்படுத்த விசேட பயிற்சி பெற்ற 30 பொலிஸ் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விசேட நடவடிக்கையின் போது இந்த விசேட குழுக்கள் அதிகாரிகளுக்கு 24 மணிநேரமும் தயார்நிலையில் இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன்போது, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரின் கண்காணிப்பின் கீழ் செயற்படும் இந்த பொலிஸ் குழுக்கள் பொலிஸ் மோப்ப நாய்கள் மற்றும் விசேட தாக்குதல் படையணி என்பவற்றையும் கொண்டுள்ளன.
இதற்கிடையே, மாத்தறை (Matara) – மிரிஸ்ஸ பிரதேசத்தில் நிலைப்படுத்தப்பட்டிருந்த துரித பொலிஸ் படையணி தற்போது மாத்தறை மாத்தறை – இஸ்ஸதீன் நகரத்திற்கு இடம் மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.