இலங்கை

ரணில் அரசின் நடவடிக்கை: சொத்துக்கள் பறிமுதல்

Published

on

ரணில் அரசின் நடவடிக்கை: சொத்துக்கள் பறிமுதல்

சட்டவிரோதமான முறையில் பெறப்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான சட்டத்தை கொண்டு வருவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தரகு மூலம், மோசடி, ஊழல் மற்றும் இலஞ்சம் மூலம் பெறப்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான சட்டத்தை கொண்டு வருவதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாக நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

கண்டியில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளதாகவும் அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும், 25 வருடங்களாக கொண்டுவரப்படாத பல சட்டமூலங்கள் கடந்த இரண்டு வருடங்களில் நிறைவேற்றப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரவையில் கலந்துரையாடி இணக்கப்பாட்டின் பின்னர் சிறந்த தீர்மானங்கள் எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version