இலங்கை

விசேட அதிரடிப்படையினரின் மோட்டார் சைக்கிள் அணி பயிற்சி நிறைவு

Published

on

விசேட அதிரடிப்படையினரின் மோட்டார் சைக்கிள் அணி பயிற்சி நிறைவு

பாதாள உலகக் கும்பல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கிலான விசேட அதிரடிப்படையின் விசேட பயிற்சி பெற்ற முதலாவது பொலிஸ் மோட்டார் சைக்கிள் அணி பயிற்சிகளை நிறைவு செய்துள்ளது.

குறித்த அணியினரின் பயிற்சி நிறைவு வைபவம் , பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் (Tiran Alles) தலைமையில் களுத்துறை கட்டுகுருந்தவில் உள்ள விசேட அதிரடிப்படை பயிற்சி பாடசாலையில் நேற்று (25) நடைபெற்றுள்ளது.

இதன்போது பயிற்சியை நிறைவு செய்த 96 சிறப்பு மோட்டார் சைக்கிள் சாரதிகள், 48 மோட்டார் சைக்கிள்களுடன் இங்கு கலைந்து சென்றனர்.

கலைந்து சென்ற அனைத்து மோட்டார் சைக்கிள் சாரதிகளுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டதுடன், அவர்கள் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேற்கு மற்றும் தெற்கு பிராந்தியங்களில் அடையாளம் காணப்பட்டுள்ள பாதாள உலகக் கும்பல் புள்ளிகளைக் கண்டறிந்து அவர்களின் நடவடிக்கைகளை ஒடுக்குவதே இந்தப் படையணியின் நோக்கமென தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version