இலங்கை

கொழும்பிற்கு வரப்போகும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள்

Published

on

கொழும்பிற்கு வரப் போகும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள்

இளைஞர் படையணியில் இருந்து ஆயிரம் பேரை கொழும்பிற்கு அழைத்து வர அரசாங்கம் முயற்சிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண (Buddhika Pathirana) குற்றம் சுமத்தியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் வைத்து இன்றைய தினம் (26.04.2024) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், மே முதலாம் திகதி கொழும்பிற்கு ஆயிரம் இளைஞர்களை அழைத்துவர அரசாங்கம் தயாராகி வருகின்றது.

இதனை முன்னெடுப்பது யார்? அரசாங்கத்திலுள்ள எந்த கட்சி இந்த நடவடிக்கையை முன்னெடுக்கின்றது என்பதை தெரியப்படுத்த வேண்டும்.

இளைஞர் படையணியில் இருந்தே ஆயிரம் இளைஞர்களை கொழும்பிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படுவதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது.

தொழிற்சங்கங்கள் என்றால் எமக்கு பிரச்சினை அல்ல ஆனால் அரசாங்கம் இளைஞர் படையணியில் இருந்தே இளைஞர்களை கொண்டு வர எத்தணிக்கின்றது.

இதற்கான செலவுகளை பெறுப்பேற்பது யார் அரசாங்கத்திலுள்ள எந்த அரசியல் கட்சி இந்த நடவடிக்கை எடுத்தள்ளது. இன்று மாலைக்குள் அரசாங்கம் இதற்கு உரிய பதிலை வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version