இலங்கை

சுற்றுலா பயணிகளின் வருகையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Published

on

சுற்றுலா பயணிகளின் வருகையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

ஏப்ரல் முதல் மூன்று வாரங்களில் மொத்தம் 107,124 சுற்றுலா பயணிகளே நாட்டிற்கு வருகை தந்துள்ளதாகவும் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளதாகவும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்த எண்ணிக்கையை ஆண்டின் முதல் மூன்று மாதங்களுடன் ஒப்பிடும் போது, ஒரு மந்தநிலையை காட்டுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை மாதம் ஆரம்பமாவதற்கு முன்னர் வரும் இரண்டு மாதங்களில் வேகம் மேலும் குறையும் எனவும் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.

இதற்கமைய நாளாந்த வருகை சராசரி 5,100 என்ற அளவில் குறைந்துள்ளதுடன், வாராந்தம் சராசரி வருகை 35,000 ஆக குறைவடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், இந்த மந்தநிலை அசாதாரணமானது அல்ல என்றும் மாதாந்த சுற்றுலா பயணிகளின் வருகை போக்குகளை பார்க்கும்போது, தொற்றுநோய்க்கு முன்பே, முதல் காலாண்டில் ஒரு உயர்வுக்கு பிறகு, ஏப்ரல் மாதத்தில் மந்தநிலை காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏப்ரல் மாதத்தில் மொத்த சுற்றுலா பயணிகளின் வருகையில் 17 வீதமானவர்கள் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளனர்.

11 வீதமானவர்கள் ரஷ்யாவிலிருந்து வருகை தந்துள்ளதோடு, 10 வீதமானவர்கள் பிரித்தானியாவிலிருந்து வருகை தந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version