இலங்கை

மதுபான கடை உரிமங்களை நண்பர்களுக்காக பெற்றுக்கொடுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

Published

on

மதுபான கடை உரிமங்களை நண்பர்களுக்காக பெற்றுக்கொடுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) ஆகிய கட்சிகளின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் மதுபான கடை உரிமங்களை தங்கள் நண்பர்களுக்காக பெற்றுக்கொடுக்கும் செயலில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர்கள் பெரும் தரகு பணத்துக்காக இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண்டி (Kandy) போன்ற சில மாவட்டங்களின் மதத் தலைவர்கள் மதுபானக் கடைகளை அமைக்கும் திட்டம் குறித்தும், உரிமம் பெற உதவியவர்கள் குறித்தும் விசாரித்ததையடுத்து இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்நிலையில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவின் (Sajith Premadasa) கவனத்திற்கு இந்த விடயம் கொண்டு வரப்பட்டதையடுத்து, அவர் இது தொடர்பில் பரிசீலிப்பதாக உறுதியளித்துள்ளார்.

மேலும், அரசியல்வாதிகள் சிலர், இத்தகைய மதுபான கடைகளை நேரடியாகவோ அல்லது தங்கள் பிரதிநிதிகள் மூலமாகவோ வைத்திருக்கிறார்கள்.

இதற்கிடையில், கட்சித் தலைமையின் அனுமதியின்றி, தமது தொகுதிகளில் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்காக அரசாங்கத்திடம் இருந்து நிதி ஒதுக்கீட்டை ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பெற்றுள்ளனர்.

இது தொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார கேள்வி எழுப்ப உள்ளதால், இன்றைய ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக் குழுவில் வாத விவாதங்கள் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version