இலங்கை

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி வழங்கும் திட்டம்!

Published

on

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி வழங்கும் திட்டம்!

தேசிய அரிசி விநியோகத் திட்டத்தின் கீழ், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு பத்து கிலோ அரிசியை வழங்குவதற்காக ஒருவரிடமிருந்து நூறு ரூபா அறவிடப்பட்ட சம்பவம் திம்புலாகல மானம்பிட்டிய கிராம சேவகர் அலுவலகத்தில் பதிவாகியுள்ளது.

குறித்த பகுதியில் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கான அரிசி விநியோகம் நேற்று (22) இடம்பெற்றுள்ளது.

இதன்போது பத்து கிலோ அரிசி வழங்க வேண்டுமாயின் நூறு ரூபாயை கொண்டு வருமாறும் தொகையைக் கொடுக்கத் தவறியவர்களுக்கு அரிசி கிடைக்காது எனவும் கிராம சங்க உறுப்பினர்கள் குறைந்த வருமானம் பெறுவோருக்கு அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் அரிசி வழங்கும் போது பணம் வசூலிப்பது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக திம்புலாகலை பிரதேச செயலாளர் எஸ்.எம். அல் அமீன் தெரிவித்துள்ளார்.

மேலும் பணம் வசூலிக்க அறிவுறுத்தல் வழங்கப்படவில்லை எனவும், அது குறித்து எழுத்து மூலம் தெரிவித்தால், அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க தயாரெனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version