இலங்கை

முச்சக்கர வண்டி கட்டணத்தில் மோசடி – பொதுமக்களுக்கு கோரிக்கை

Published

on

முச்சக்கர வண்டி கட்டணத்தில் மோசடி – பொதுமக்களுக்கு கோரிக்கை

கையடக்கத் தொலைபேசி (Mobile phone) மூலம் கட்டணம் வசூலிக்கும் முச்சக்கர வண்டி (Three Wheelers) சாரதிகளுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டம் எதிர்வரும் ஜூலை மாதம் முதல் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த தகவலை மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை வெளியிட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் சபை மேலும் விளக்கமளிக்கையில்,

போக்குவரத்தில் பயன்படுத்தப்படும் முச்சக்கர வண்டிகளில் (Three Wheelers) கட்டணத்தை காட்டும் மீற்றர் கட்டாயம் பொருத்தப்பட வேண்டும் என அதிகாரசபை தெரிவித்துள்ளது.

மேலும், பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் முச்சக்கரவண்டி சாரதிகள் கையடக்கத் தொலைபேசிகள் மூலம் கட்டணங்களை வசூலித்தால் அது தொடர்பான முறைப்பாடுகளை 0112860860 என்ற இலக்கத்திற்கு அறிவிக்குமாறு மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version