இலங்கை

இந்தியா – இலங்கையிடையே தரை வழிப்பாதை

Published

on

இந்தியா – இலங்கையிடையே தரை வழிப்பாதை

இந்தியாவும் இலங்கையும் இணைந்து தரை வழிப்பாலத்தை அமைப்பதற்கான பணிகளை ஆரம்பித்துள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா (Santhosh Ja) தெரிவித்துள்ளார்.

கொழும்பில் (Colombo) தனியார் விருந்தகத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் வைத்தே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

இந்த தரைப்பாதை இரு நாடுகளுக்கிடையிலான சுற்றுலாவை மேம்படுத்த உதவும் என்பதோடு நாடுகளுக்கு இடையிலான உறவில் மாற்றத்துக்கான வழியை ஏற்படுத்தும்.

சுற்றுலாவை மேம்படுத்துவது இரண்டு நாடுகளின் முக்கிய நோக்கமாக இருப்பதாக குறிப்பிட்ட உயர்ஸ்தானிகர் இலங்கையைப் பொறுத்தவரை இது பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஒரு முக்கிய ஆதாரமாக இருந்து வருகிறது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் (Ranil Wickremesinghe) பிரதமர் நரேந்திர மோடியும் (Narendra Modi) 2023ஆம் ஆண்டு ஜூலை புதுடில்லியில் உச்சி மாநாட்டை நடத்தியபோது வெளியிடப்பட்ட தொலைநோக்கு ஆவணத்தில் இரு நாடுகளிலும் பௌத்த சுற்றுலா மற்றும் இராமாயண பாதையை மேம்படுத்துவதற்கு உறுதியளித்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகையில் இந்தியா ஏற்கனவே பாரிய பங்களிப்பை வழங்குவதாகவும் உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version