இலங்கை

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் உட்பட 5 நிறுவன தலைவர்களுக்கு உத்தரவு

Published

on

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் உட்பட 5 நிறுவன தலைவர்களுக்கு உத்தரவு

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் (SriLankan Airlines) உட்பட 5 அரச நிறுவன தலைவர்களை கோப் குழுவில் (Cope) முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஐந்து அரச நிறுவனங்களின் தலைவர்களும் இந்த வாரம் பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்றக் குழுவின் (கோப் குழு) முன்னிலையாகவுள்ளனர்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (University Grants Commission), இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், தேசிய வர்த்தக முகாமைத்துவ நிறுவனம் மற்றும் மஹாபொல உயர் கல்வி உதவித்தொகை நிதி என்பன ஏனைய நிறுவனங்கள் ஆகும்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் (Sri Lanka Broadcasting Corporation) தலைவர்கள் நாளை மறுதினம் (24.4.2024) 2.00 மணிக்கும் முன்னிலையாக உள்ளனர்.

மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, தேசிய வர்த்தக முகாமைத்துவ நிறுவனம் மற்றும் மஹாபொல உயர்கல்வி உதவித்தொகை நிதியத்தின் தலைவர்கள் மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் (SriLankan Airlines) தலைவர்கள் அனைவரும் 25 ஆம் திகதி ஒன்று கூடவுள்ளளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version