இலங்கை

மீண்டும் சிங்கள அரசை குறிவைக்குமா கனடா…! எச்சரிக்கையுடன் இலங்கை

Published

on

மீண்டும் சிங்கள அரசை குறிவைக்குமா கனடா…! எச்சரிக்கையுடன் இலங்கை

இலங்கையின் போர் வெற்றியை நினைவு கூறும் சமயத்தில் கனடா தலைவர்கள் கொண்டுவரும் இனப்படுகொலைக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று இலங்கையின் இராஜதந்திர வட்டாரம் தெரிவித்துள்ளது.

அடுத்தமாதம் இலங்கையில் போர் வெற்றியை நினைவுகூறுதல் தொடர்பான கலந்துரையாடல்களின் போதே இந்த விடயம் தொடர்பில் பேசப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு (2023), கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இலங்கை மீது இனப்படுகொலை குற்றச்சாட்டுகளை முன்வைத்தார், இது இரு நாடுகளுக்கும் இடையே இராஜதந்திர மோதலைத் தூண்டியது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இலங்கை கனேடியத் தூதுவரை வரவழைத்தது.

இந்த விடயத்தில் இதற்கு முன்னர் இலங்கை எதிர்ப்பு தெரிவித்த போதிலும், இம்முறையும் இவ்வாறான குற்றச்சாட்டுகள் மீண்டும் இடம்பெறுமா என்பதை உறுதிப்படுத்த இலங்கை அரசாங்கம் ஆர்வமாக உள்ளதாக இராஜதந்திர வட்டாரம் தெரிவித்துள்ளது.

போரின் போது இலங்கையில் நடந்த சம்பவங்கள் இனப்படுகொலைக்கு சமமானவை அல்ல என்று கனேடிய கூட்டாட்சி அரசாங்கம் முடிவு செய்திருந்தாலும், கனேடிய தலைவர்கள் இத்தகைய குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர் என்பது மறுக்க முடியாத உண்மை என்றும் அவர்கள் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Exit mobile version