இலங்கை

இலங்கை திரும்பிய வைத்தியருக்கு அதிர்ச்சி

Published

on

இலங்கை திரும்பிய வைத்தியருக்கு அதிர்ச்சி

கொழும்பு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெறுமதியான வீடுகளை மூடிவிட்டு வெளிநாடுகளுக்குச் செல்பவர்களின் வீடுகளுக்கு போலி ஆவணங்கள் தயாரித்து விற்பனை செய்து அல்லது வாடகைத் தளத்திற்குக் கொடுக்கும் மோசடி நடைபெறுவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொரளை அல்விட்டிகல மாவத்தையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ரசாஞ்சலி ரத்நாயக்க என்ற வைத்தியர் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் பணிக்கு சென்றுள்ளார்.

பணி முடிந்து இலங்கை திரும்பிய போது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு வேறு தம்பதிகளுக்கு வாடகைக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் அவர் பொரளை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

​​இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் ருவான் டி சொய்சா நேற்று சட்டத்தரணி ஊடாக பொலிஸில் சரணடைந்துள்ளார்.

அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொரளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சஞ்சீவ சில்வா தெரிவித்துள்ளார்.

Exit mobile version