இலங்கை

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலுக்கு வாய்ப்பில்லை

Published

on

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலுக்கு வாய்ப்பில்லை

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்ாகன முயற்சி வெற்றியளிக்காது என தான் நம்புவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க(S. B. Dissanayake) தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, “அரசமைப்பினர் பிரகாரம் செப்டெம்பர், ஒக்டோபர் இடைப்பட்ட காலப்பகுதியில் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

ஜனாதிபதி நினைத்தால் நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தலை நடத்தலாம்.

அவ்வாறு இல்லாவிட்டால் 113 எம்.பிக்கள் இணைந்து யோசனையொன்றை வழங்கினால் முன்கூட்டியே நாடாளுமன்றத் தேர்தலை நடத்தலாம்.

இது ஒரு சவாலுக்குரிய விடயம். எனவே அந்த முயற்சி கைகூடாது என்றே கருதுகின்றேன்.

அதேவேளை, ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் மொட்டுக் கட்சி ஐக்கியமாகவே முடிவெடுக்க வேண்டும். கட்சி எடுக்கும் முடிவுக்கு நான் கட்டுப்படுவேன்” என தெரிவித்துள்ளார்.

Exit mobile version