இலங்கை

இலங்கை அரசாங்கம் ரஷ்ய இராணுவத்திடம் கோரிக்கை

Published

on

இலங்கை அரசாங்கம் ரஷ்ய இராணுவத்திடம் கோரிக்கை

இலங்கை அரசாங்கம் ரஷ்ய இராணுவத்திடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது.

இலங்கையைச் சேர்ந்த படையினர், ரஷ்ய இராணுவத்தில் இணைந்து கொண்டுள்ளனரா என்தபனை கண்டறிந்து அறிவிக்குமாறு கோரியுள்ளது.

ரஷ்யாவிற்கான இலங்கையின் பேராசிரியர் ஜனிட்டா லியனகே அதிகாரபூர்வமாக இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இலங்கைப் படையினர் ரஷ்ய இராணுவத்தில் இணைந்து கொண்டு போரில் ஈடுபட்டு வருவதாக அண்மையில் ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

குறிப்பாக சம்பளத்திற்காக ரஷ்ய படையில் இணைந்து கொண்ட சில இலங்கைப் படையினர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இலங்கைப் படைப்பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் ரஷ்ய இராணுவத்தில் இணைந்து கொண்டுள்ளனரா என்பது குறித்த தகவல்களை தாம், ரஷ்ய இராணுவத்திடம் கோரியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சட்டவிரோதமான முறையில் சில முன்னாள் படையினர் ரஷ்ய இராணுவத்தில் இணைந்து கொண்டிருக்கலாம் என பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் கேணல் நலின் ஹேரத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு சட்டவிரோதமான முறையில் செயற்படுவதனால் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் குறித்து படையினருக்கு தெளிவூட்டப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கூடுதல் தொகையில் சம்பளம் வழங்கப்படும் என கூறப்பட்டு படையில் இணைத்துக் கொள்ளப்படலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

எனினும், போரில் உயிரிழந்தால் நட்டஈடு கிடைக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Exit mobile version