இலங்கை

இலங்கையின் கடன் மறுசீரமைப்பில் தடங்கல்

Published

on

இலங்கையின் கடன் மறுசீரமைப்பில் தடங்கல்

தனியார் பத்திரப்பதிவுதாரர்களுடனான இலங்கையின் கடன் மறுசீரமைப்பு(Debt restructuring) பேச்சுவார்த்தையில் இரண்டு விடயங்களில் தடங்கல் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் தலைமைப் பணிப்பாளர் சாகல ரத்நாயக்க(Sagala Ratnayake) தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, “ஆலோசகர்களின் அறிவுறுத்தலின் பேரில் இரண்டு தரப்பினரும் இந்த ஆண்டு இரண்டு பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டனர்.

இதன்போது கருத்து வேறுபாடுகள் உள்ள நான்கு பகுதிகள் அடையாளம் காணப்பட்டன.

பின்னர் பேச்சுவார்த்தைகளின் விளைவாக அவை இரண்டாகக் குறைக்கப்பட்டது. எனினும் அந்த விடயங்கள் எதுவென்பதை வெளிப்படுத்த முடியாது.

இதேவேளை இருதரப்பு கடன் மறுசீரமைப்பு தொடர்பில், சீனாவுடனும்(China) இலங்கை ஒரு வெற்றிகரமான பேச்சுவார்த்தையை நடத்தியுள்ளது.

இதன் அடுத்த கட்டமாக அந்த கடன்கொடுத்தோருடன் உடன்படிக்கைகள் செய்துக்கொள்ளப்படவுள்ளன” என தெரிவித்துள்ளார்.

Exit mobile version