இலங்கை

நாடாளுமன்றத்தில் உருவாக்கப்பட்ட புதிய பதவிக்கு 6 இலட்சம் சம்பளம்

Published

on

நாடாளுமன்றத்தில் உருவாக்கப்பட்ட புதிய பதவிக்கு 6 இலட்சம் சம்பளம்

நாடாளுமன்றத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட பதவியான ‘பாதீட்டு அதிகாரிக்கு’ மொத்த மாதச் சம்பளமாக 665,000 ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தியோகபூர்வ இணையத்தளத்தின்படி, அதிகாரியின் அடிப்படை சம்பளம் 408,360 என்றும், அது அனைத்து கொடுப்பனவுகளுடன் மொத்தம் 665,000 ரூபாவாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

அதிகாரியின் வயது வரம்பு 65 ஆக இருக்க வேண்டும். என்பதோடு அரச வரவு செலவுத் திட்டம், நிதிக் கொள்கை, அல்லது பொருளாதார பகுப்பாய்வு ஆகியவற்றில் குறைந்தபட்சம் 15 வருட அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

எவ்வாறாயினும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் பொது நிதிக்கான குழுவின் தலைவருமான ஹர்ச டி சில்வா, முன்னாள் மூத்த பல்தரப்பு முகவர் நிபுணத்துவம் இந்த வேலைக்கு பொருந்துவார் என்று கூறியுள்ளார்.

அவரைப் பொறுத்தவரை பாதீட்டு அதிகாரி ஐந்தாண்டு ஒப்பந்தத்தில் பணியமர்த்தப்படுவார். 2023 ஆம் ஆண்டின் 6 ஆம் இலக்க நாடாளுமன்ற வரவு செலவுத் திட்ட அலுவலகச் சட்டத்தின் 14 ஆவது பிரிவின் கீழ் இந்தப் பதவி உருவாக்கப்பட்டது.

தகுதி வாய்ந்த, நேர்மையான, உயர்ந்த ஒழுக்க நேர்மை மற்றும் நல்ல நற்பெயரைக் கொண்ட இலங்கைப் பிரஜைகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. துணை பாதீட்டு; அதிகாரி பதவியும் இந்த சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற பாதீட்டு அலுவலகம் அரசியலமைப்பின் கீழ் பொது நிதி பொறுப்புகளை நிறைவேற்றுவதில் சட்டமன்றத்திற்கு உதவும் நோக்கத்துடன் நிறுவப்பட்டது. நாடாளுமன்ற பாதீட்டு அலுவலகம் சுதந்திரமானதாகவும், கட்சி சார்பற்றதாகவும், எந்தவொரு அரசியல் செல்வாக்கிலிருந்தும் பிரத்தியேகமாகவும் பாதுகாக்கப்பட்டதாகவும் இருக்கும்.

Exit mobile version