இலங்கை

யாழில் வெளிநாட்டு மோகத்தால் கோடிக்கணக்கில் பண மோசடி

Published

on

யாழில் வெளிநாட்டு மோகத்தால் கோடிக்கணக்கில் பண மோசடி

யாழ்ப்பாணத்தில் (Jaffna) வெளிநாடுகளுக்குச் செல்வதற்காகப் பணம் கொடுத்து ஏமாறும் சம்பவங்கள் அண்மைய நாள்களில் வெகுவாக அதிகரித்துள்ளன.

இந்நிலையில், வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக யாழ்ப்பாணத்தை (Jaffna) சேர்ந்தவர்களிடம் சுமார் 2 கோடியே 50 இலட்ச ரூபாய் பணத்தை மோசடி செய்த பெண் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மோசடி நடவடிக்கை குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த பெண் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாகவும், வெளிநாடுகளில் வேலை வாய்ப்புக்களை பெற்று தருவதாகவும், சமூக ஊடகங்கள் ஊடாக விளம்பரங்களை செய்து யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பலரிடம் சுமார் இரண்டரை கோடி ரூபாய் பணத்தினை மோசடி செய்துள்ளார்.

மோசடி தொடர்பில் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு (Jaffna District Police) கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த வேளை அந்த பெண் கொழும்பில் (Colombo) பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்நிலையில், கொழும்பில் தலைமறைவாகி இருந்த நிலையில் பெண் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் அப்பெண் கொழும்பிலும் மோசடிகளில் ஈடுபட்டுள்ளாரா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதன் பின்னர் யாழ்ப்பாண பொலிஸாரிடம் அவரை கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version