இலங்கை
இலங்கையில் அதிகரிக்கும் சைபர் தாக்குதல்கள்
இலங்கையில் அதிகரிக்கும் சைபர் தாக்குதல்கள்
இலங்கையில் மாதாந்தம் 25 முதல் 30 இணையத்தளங்கள் சைபர் தாக்குதலுக்கு உள்ளாவதாக தெரிய வந்துள்ளது.
இலங்கை கணினி அவசர பதிலளிப்பு மன்றத்தின் பிரதம தகவல் பாதுகாப்பு அதிகாரி நிரோஷ் ஆனந்த இதனைத் தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சின் உத்தியோகப்பூர்வ இணையத்தளம் அண்மையில் இனந்தெரியாத நபரொருவால் ஊடுருவப்பட்டது.
இந்த சட்டவிரோத நடவடிக்கை தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது குறித்த இணையத்தளம் மீளமைக்கப்பட்டுள்ளதாக நிரோஷ் ஆனந்த தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், தற்போது இலங்கையில் மாதாந்தம் 25 முதல் 30 இணையத்தளங்கள் இவ்வாறாக இனந்தெரியாத தரப்பினரால் ஊடுருவப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதையடுத்து, இவ்வாறான நடவடிக்கைகள் குறித்த மக்கள் அறிந்திருக்க வெண்டுமென்பதோடு அவதானமாக இருக்க வேண்டுமெனவும் அவர் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.