இலங்கை

வாகன இறக்குமதிக்கு அனுமதி : நிதி இராஜாங்க அமைச்சின் அறிவிப்பு

Published

on

வாகன இறக்குமதிக்கு அனுமதி : நிதி இராஜாங்க அமைச்சின் அறிவிப்பு

தேவைக்கு ஏற்ப வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய(Ranjith Siyambalapitiya) தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

மேலும், தற்போது மத்திய வங்கிக்கு சொந்தமான வெளிநாட்டு கையிருப்பு 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை தாண்டியுள்ளது.

கடந்த காலங்களில் வெளிநாட்டு கையிருப்பு பூஜ்ஜியமாக காணப்பட்டது. தற்போது வெளிநாட்டு கையிருப்பு அதிகரித்துள்ள நிலையில் நாம் இறக்குமதி தடைகளை கட்டம் கட்டமாக நீக்கினோம்.

அதேபோல் தற்போது வாகன இறக்குமதிக்கு மாத்திரமே தடை விதிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் காலங்களில் உரிய முறைமையின் கீழ் நாம் தேவைக்கு ஏற்ப வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கியுள்ளோம்.

சுற்றுலாத் துறைக்கு தேவையான 750 வேன்கள் மற்றும் 250 பேருந்துகள் இறக்குமதி செய்ய அனுமதித்துள்ளோம். மிகவும் நுணுக்கமாக தேடிப்பார்த்து ஆராய்ந்த பின்னரே நாம் முடிவுகளை எடுக்கிறோம்.

சுற்றுலாத்துறை வளர்ச்சியடைகிறது. ரூபாயின் பெறுமதி அதிகரிக்கிறது. இதனால், எதிர்காலத்தில் அத்தியாவசியமான வாகனங்கள் எவை, தவிர்க்க முடியாத தேவையுடைய வாகனங்கள் தொடர்பில் ஆராய்ந்த பின்னர் அதற்கு வாகனங்களை இறக்குமதி செய்ய இடம் கொடுப்போம் என குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version