இலங்கை
நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
புத்தாண்டு விளையாட்டு நிகழ்வுகளில் ஆபாசமான அல்லது கலாச்சாரத்திற்கு முரணான வகையில் போட்டிகளை ஏற்பாடு செய்வதை தவிர்க்குமாறு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை பெண்கள் மற்றும் குழந்தைகளை துன்புறுத்தும் வகையில் போட்டிகளை நடத்துவதை தவிர்க்குமாறு பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தவுடன் அந்த போட்டிகளை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் புத்தசாசன, கலாசாரத்திற்கு எதிரான விடயங்கள் மற்றும் விளையாட்டுக்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களில் (New Year Celebration) இடம்பெற்றால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க (Vidura Wickramanayake) எச்சரிக்கை விடுத்திருந்தார்.
புத்தாண்டு கொண்டாட்டங்களை நடத்துவது தொடர்பிலான ஆலோசனைகள் அனைத்து மாவட்ட செயலாளர்கள் ஊடாக பிரதேச செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.